பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை நொறுக்கிய மே.தீவுகள்! பதிலடி கொடுத்த ஒற்றை வீரர்
இங்கிலாந்து முதல் தர அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கவேம் ஹாட்ஜ் சதம் விளாசினார்.
கவேம் ஹாட்ஜ் சதம்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 10ஆம் திகதி தொடங்க உள்ளது.
அதற்கு முன்பாக முதல் தர கவுண்டிஸ் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்க்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் 339 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதிரடியாக ஆடிய கவேம் ஹாட்ஜ் (Kavem Hodge) 128 பந்துகளில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் குவித்தார்.
Stumps: Kavem Hodge dazzled with a sparkling century of 112 runs from 128 balls on Day1️⃣ of the 3-Day warm up.
— Windies Cricket (@windiescricket) July 3, 2024
WI 339/10 in 72.1 overs
Mikyle Louis - 50 (63)
Kirk McKenzie - 73(85)
Alick Athanaze - 74(105)
FCCS XI 15-0 from 3 overs#ENGvWI
?: Kyle Andrews#ENGvWI pic.twitter.com/PpM70JT5zW
வில் லக்ஸ்டன் அதிரடி
அலிக் அதனசி 74 ஓட்டங்களும், கிர்க் மெக்கென்சி 73 ஓட்டங்களும், மிக்கைல் லூயிஸ் 50 ஓட்டங்களும் எடுத்தனர். ஜான் டர்னர், ஃபர்ஹான் அகமது தலா 4 விக்கெட்டுகளும், ஜோஷ் ஹல் மற்றும் ஃபோர்மேன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதி ஆட்டத்தை திருப்பிப் போட்ட சூர்யகுமார் யாதவின் கேட்ச் - சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்த வீடியோ!
பின்னர் முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து முதல் தர அணி 4 விக்கெட் இழப்பிற்கு 373 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
வில் லக்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 130 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்களும், ஹம்சா ஷெய்க் 84 (112) ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |