குமார் சங்ககாராவின் இலங்கை மாஸ்டர்ஸ் அதிர்ச்சி தோல்வி! கடைசிவரை போராடிய குணரத்னே
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
ராம்டின் சரவெடி
ராய்பூரில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் 179 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் பிரையன் லாரா 41 (33) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிடையர் ஹர்ட் ஆனார்.
எனினும், ருத்ர தாண்டவம் ஆடிய டேனேஷ் ராம்டின் 22 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் குமார் சங்ககாரா 17 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, திரிமன்னே 9 ஓட்டங்களில் வெளியேறினார்.
4️⃣💥4️⃣💥6️⃣!
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 14, 2025
𝐃𝐞𝐧𝐞𝐬𝐡 𝐑𝐚𝐦𝐝𝐢𝐧 takes the bowling attack apart! 💪
Watch the action LIVE now ➡ on @JioHotstar, @CCSuperhits & @CCSuperhits! #IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/IR8xj407vF
அதிரடி காட்டிய உபுல் தரங்கா 22 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அசெல குணரத்னே வெற்றிக்காக போராட, மறுமுனையில் பெஸ்ட் மற்றும் ஸ்மித்தின் மிரட்டல் பந்துவீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன.
குணரத்னேவின் அரைசதம் வீண்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் குணரத்னே சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்க, சிம்மோன்ஸ் துல்லியமாக பந்துவீசி 3 பந்துகளை டாட் செய்ததுடன், கடைசி பந்தில் விக்கெட் எடுத்தார்.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அசெல குணரத்னே (Asela Gunaratne) 42 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசினார். உதானா 21 (10) ஓட்டங்கள் எடுத்தார். டினோ பெஸ்ட் 4 விக்கெட்டுகளும், டிவைன் ஸ்மித் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐰𝐚𝐲 𝐭𝐨 𝐞𝐧𝐝 𝐢𝐭! 😱
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 14, 2025
A dramatic last-ball dismissal as Gunaratne falls, bringing an end to a thrilling contest! 🚨 #WestIndiesMasters hold strong and 𝐦𝐚𝐫𝐜𝐡 𝐢𝐧𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐟𝐢𝐧𝐚𝐥𝐬! 💪 #IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/YSMRFJwNWh
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
𝐓𝐡𝐞 #𝐖𝐞𝐬𝐭𝐈𝐧𝐝𝐢𝐞𝐬𝐌𝐚𝐬𝐭𝐞𝐫𝐬 𝐬𝐞𝐭 𝐒𝐚𝐢𝐥 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 #IMLT20 𝐅𝐢𝐧𝐚𝐥 💥🏁
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 14, 2025
The Masters shined under pressure, and have powered their way to compete for the 𝐔𝐥𝐭𝐢𝐦𝐚𝐭𝐞 𝐏𝐫𝐢𝐳𝐞 🏆💪#TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/E49mG1fUOL
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |