இருமுறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி அதிர்ச்சி தோல்வி! உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்
பால் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார்
4 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய டெலனி ஆட்டநாயகன் விருதை வென்றார்
ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் தோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை விட்டு வெளியேறியது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, பிரண்டன் கிங் அதிரடியால் 146 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். கேப்டன் ஆன்ட்ரூ பல்பரினி 37 (23) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
The two-time champions West Indies are OUT ❌
— Sportskeeda (@Sportskeeda) October 21, 2022
A very disappointing T20 World Cup campaign for Nicholas Pooran and his troops. #WestIndies #T20WorldCup #CricketTwitter pic.twitter.com/l5Af024RU9
மற்றொரு தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் மற்றும் லோர்க்கன் டக்கர் இருவரும் அதிரடியில் மிரட்டி அணியை வெற்றி பெற வைத்தனர். அயர்லாந்து அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பால் ஸ்டிர்லிங் 66 ஓட்டங்களும், டக்கர் 45 ஓட்டங்களும் விளாசினர்.
Absolutely gutted..? pic.twitter.com/5NKTmJTwAK
— Windies Cricket (@windiescricket) October 21, 2022
இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 12 வாய்ப்பை அயர்லாந்து தக்க வைத்துள்ளது. ஆனால், இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை விட்டு வெளியேறியது. இது அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி ஏனைய கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சி அளித்துள்ளது.
What it means! ?
— ICC (@ICC) October 21, 2022
A memorable day for Ireland as they progress to the Super 12 ?#T20WorldCup | #IREvWI pic.twitter.com/agiPYOhRj0