ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மேற்கிந்திய தீவுகள் வீரர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த சுனில் நரைன், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
மும்பையில் நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இது அவருக்கு 150வது விக்கெட்டாகும்.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக 150 விக்கெட்டுகளை ஐபிஎல் கிரிக்கெட்டில் வீழ்த்தியவர்களில் 8வது இடத்தை பிடித்துள்ளார் சுனில் நரைன்.
மற்றோரு மேற்கிந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பிராவோ 181 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.