ஓய்வுபெற்ற பூரன்.,பதிலாக ருத்ர தாண்டவமாடிய வீரர்! டி20யில் இமாலய சாதனை
அயர்லாந்திற்கு எதிரான டி20யில் மேற்கிந்திய தீவுகள் அணி 256 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தது.
லீவிஸ் சரவெடி ஆட்டம்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.
மூன்றாவது டி20 போட்டி நேற்று ப்ரெடி கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடந்தது. முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில், தொடக்க வீரர்களான எவின் லீவிஸ் மற்றும் ஷாய் ஹோப் சரவெடி ஆட்டம் ஆடினர்.
இந்தக் கூட்டணி 63 பந்துகளில் 122 ஓட்டங்கள் குவித்தது. 27 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 51 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஷாய் ஹோப் (Shai Hope) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரோவ்மான் பௌல் 2 ஓட்டங்களில் வெளியேற, சிக்ஸர் மழை பொழிந்த எவின் லீவிஸும் விக்கெட்டை இழந்தார்.
எவின் லீவிஸ் (Evin Lewis) 44 பந்துகளில் 91 ஓட்டங்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
மேற்கிந்திய தீவுகள் 256 ஓட்டங்கள்
எனினும் கேசி கார்ட்டி (Keacy Carty) 22 பந்துகளில் 49 ஓட்டங்கள் விளாச, மேற்கிந்திய தீவுகள் 256 ஓட்டங்கள் குவித்தது.
இது அந்த அணியின் இரண்டாவது அதிகபட்ச டி20 ஸ்கோர் ஆகும். இதனைத் தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 194 ஓட்டங்கள் எடுத்ததால், மேற்கிந்திய தீவுகள் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ரோஸ் அடைர் 48 (36) ஓட்டங்களும், ஹாரி டெக்டர் 38 (25) ஓட்டங்களும் எடுத்தனர். அக்கீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
நிக்கோலஸ் பூரனின் ஓய்வுக்கு பிறகு லீவிஸின் இந்த அதிரடி ஆட்டம், அவரது இடத்தை நிரப்பும் வகையில் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |