தென் ஆப்பிரிக்காவை Whitewash செய்து பழிதீர்த்த மேற்கிந்திய தீவுகள் அணி
டிரினிடாட்டில் நடந்த கடைசி டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
கடைசி டி20 போட்டி
மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி டிரினிடாட்டில் நடந்தது. மழை காரணமாக 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றியமைக்கப்பட்டது.
Fabian takes a blinder as the #MenInMaroon break the opening partnership!🏏💥 #WIvSA #T20Fest pic.twitter.com/z7At6bJspw
— Windies Cricket (@windiescricket) August 27, 2024
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ஓட்டங்கள் குவித்தது. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் விளாசினார்.
ரோமரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளும், அகேல் ஹொசைன் மற்றும் மேத்யூ போர்டே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மேற்கிந்திய தீவுகள் வெற்றி
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 9.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷாய் ஹோப் 24 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 42 ஓட்டங்களும், பூரன் 13 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களும் எடுத்தனர். ஷிம்ரான் ஹெட்மையர் 17 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்களும் விளாசினார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை Whitewash செய்தது.
டெஸ்ட் தொடரை தென் அப்பிரிக்காவிடம் இழந்த மேற்கிந்திய தீவுகள், டி20 தொடரை வென்று பழிதீர்த்தது.
Nicky P gets straight to business!🏏🔥 #WIvSA #T20Fest pic.twitter.com/gUGHIhHbtn
— Windies Cricket (@windiescricket) August 27, 2024
Hold the pose....rate this cover drive from Shai Hope!🏏💥 #WIvSA #T20Fest pic.twitter.com/R2YwlWwh2s
— Windies Cricket (@windiescricket) August 27, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |