5 பேர் டக்அவுட்.,202 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி! 34 ஆண்டுகால பழிதீர்த்த மே.தீவுகள்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, மேற்கிந்திய தீவுகளை தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
ஷாய் ஹோப் 120 ஓட்டங்கள்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ட்ரினிடாட்டில் நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்கு 294 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் ஷாய் ஹோப் 94 பந்துகளில் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 120 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் ஜேடன் சீல்ஸ் பந்துவீச்சில் சரிந்தது. மொத்தம் 5 வீரர்கள் டக்அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 92 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக சல்மான் அஹா 30 ஓட்டங்களும், முகமது நவாஸ் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜேடன் சீல்ஸ் மிரட்டலான பந்துவீச்சு
ஜேடன் சீல்ஸ் (Jayden Seales) 18 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
202 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |