சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் பூரன்! தொடரை கைப்பற்றி மிரட்டிய மேற்கிந்திய தீவுகள்
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகள்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கயானாவில் நடந்தது.
முதலில் ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிப் ஹோசைன் 50 ஓட்டங்களும், லித்தன் தாஸ் 49 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கைல் மேயர்ஸ் சிக்ஸர்களை பறக்க விட்டார். அவர் 38 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசினார்.
PC: Twitter(@windiescricket)
அடுத்து வந்த ப்ரூக்ஸ், ஓடியன் ஸ்மித் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கேப்டன் பூரன் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
PC: Twitter(@windiescricket)
அவரது அதிரடியான ஆட்டத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்ற பெற்றது.
PC: Twitter(@ICC)
பூரன் 39 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகள் என 74 ஓட்டங்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
PC: Twitter(@ICC)