கணவருடன் சேர்ந்து லொட்டரி வாங்கிய பிரித்தானிய பெண்: கணவரை இழந்தபின் கிடைத்த இன்ப அதிர்ச்சி
தன் கணவருடன் சேர்ந்து லொட்டரிச்சீட்டு வாழ்ங்கும் பழக்கம் கொண்ட பிரித்தானியப் பெண் ஒருவர், கணவரை இழந்து கவலையில் ஆழ்ந்திருந்த நிலையில், அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
மாரடைப்பால் மரணமடைந்த கணவர்
கிரேட்டர் மான்செஸ்டரிலுள்ள ஸ்விண்டன் என்னுமிடத்தில் வாழும் லெஸ்லீ (Lesley McNally, 54) கேரி (Garry) தம்பதியர், இணைந்து லொட்டரிச்சீட்டு வாங்கும் வழக்கம் கொண்டவர்கள்.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், தனது 60 ஆவது பிறந்தநாளைக்கொண்டாடி ஐந்து நாட்களே ஆன நிலையில், திடீரென மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் கேரி.
People’s Postcode Lottery
கணவரை இழந்து, பிள்ளைகள் தங்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்க்கச் சென்றுவிட்ட நிலையில், முன்னர் தன் கணவருடன் சேர்ந்து லொட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட லெஸ்லீ, கணவர் இறந்தபிறகும் லொட்டரி வாங்குவதைத் தொடர்ந்துள்ளார்.
இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி
கணவரை இழந்தும், இப்போதும் அலுவலகம் செல்லும் லெஸ்லீ, லொட்டரிச்சீட்டு வாங்கும் இடத்தின் முன் கூட்டமாக மக்கள் நிற்பதைக் கண்டு, யாருக்காவது லொட்டரியில் பரிசு விழுந்திருக்கிறதா என்று விசாரித்திருக்கிறார்.
அப்போது, லொட்டரி வாங்கிய பலருக்கு பெருந்தொகை பரிசாக கிடைத்துள்ளதையும், அவர்களில் தானும் ஒருவர் என்பதையும் அறிந்த லெஸ்லீ மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார்.
People’s Postcode Lottery
லெஸ்லீக்கு 166,666 பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது!
ஒரு பக்கம் பரிசு கிடைத்த மகிழ்ச்சி, மறுபக்கமோ அதைக் கொண்டாட 37 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த கணவர் தன்னுடன் இல்லையே என்னும் வருத்தம், என பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகியிருக்கிறார் லெஸ்லீ.
People’s Postcode Lottery