உடனடியாக வெளியேறுக... லண்டனில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு உள்விவகார அமைச்சகம் கடிதம்: தெரியவந்த உண்மை
லண்டனில் பணியாற்றும் நெதர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு அனுப்பிய கடிதம் அவருக்கு ஏற்படுத்திய நெருக்கடியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
உள்விவகார அமைச்சகத்திடம் இருந்து கடிதம்
பிரித்தானிய பெண்மணியை திருமணம் செய்து கொண்டு, லண்டனில் பணியாற்றி வந்துள்ளார் Bobby Stuijfzand என்பவர். கடந்த 2020ல் புற்றுநோய்க்கு 35 வயதான தமது மனைவி Suzannah என்பவரை இழந்துவிட்டு, 6 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வருபவர் Bobby Stuijfzand.
Image: Bobby Stuijfzand
இந்த நிலையில் தான், பிரித்தானிய உள்விவகார அமைச்சகத்திடம் இருந்து இந்த மாத துவக்கத்தில் Bobby Stuijfzand-க்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், உங்களுக்கான விசா ரத்து செய்யப்படுகிறது எனவும், நீங்கள் உங்கள் ஸ்பான்சருக்கு வேலை செய்வதை நிறுத்திவிட்டீர்கள் என்பது அறியவந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில், Bobby Stuijfzand அவருடைய ஸ்பான்சர் நிறுவனத்தில் தான் பணியாற்றி வருகிறார். அந்த கடிதத்தில், தங்குவதற்கான உங்கள் அனுமதியை ரத்து செய்யும் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவோ அல்லது நிர்வாக மதிப்பாய்வு செய்யவோ உங்களுக்கு உரிமை இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
39 வயதான Bobby Stuijfzand தமக்கு கிடைத்த அந்த கடிதத்தால், தமது குடும்பம் பாதிக்கப்படும் என்ற நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். சிக்கலான நெருக்கடியில் தாம் சிக்கியுள்ளதை உணர்ந்த அவருக்கு, உள்விவகாரத் துறையிடம் இருந்து இன்னொரு கடிதம் வந்துள்ளது.
மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வேண்டும்
அதில், தங்கள் தவறை சுட்டிக்காட்டி மன்னிப்பும் கோரப்பட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை உள்விவகார அமைச்சகம் தெரிவிக்கவில்லை என்றே Bobby Stuijfzand குறிப்பிடுகிறார்.
Image: Bobby Stuijfzand
மேலும், இப்படியான ஒரு முடிவெடுக்கும் முன் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், பிரித்தானிய குடிமகளான தமது மகளை தனியாக நெதர்லாந்தில் இருந்து லண்டனுக்கு ரயிலில் அனுப்பி வைக்க முடியாது எனவும்,
மனைவியை இழந்த எனக்கு தற்போது இருக்கும் ஒரே ஆதரவு தமது மகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமது கிடைத்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி இலக்கம், பயன்பாட்டில் இல்லாதது எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |