பிரித்தானிய பிரதமர் போட்டியில் சுறுசுறுப்பாக இயங்கும் ரிஷி சுனக்! அவருக்கு ஆதரவாக களமிறங்கிய மனைவி
பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்து அவர் மனைவியும் கலந்து கொண்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்த கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரித்தானிய அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகித்து வருகிறார். தான் பிரதமராக தேர்வானால் நாட்டுக்கு என்னவெல்லாம் செய்வேன் என்பது குறித்து பல பொது நிகழ்ச்சிகளில் ரிஷி பேசி வருகிறார்.
அந்த வகையில் நாட்டின் கிராந்தம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ரிஷி சுனக்குடன் அவர் மனைவி அக்ஷதா மற்றும் இரண்டு மகள்களும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்ட ரிஷி, குடும்பம் தான் எனக்கு எல்லாம். நேற்றைய நிகழ்வில் எனது குடும்பத்தினரின் ஆதரவைப் பெற்றதற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உடன் வந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.