கணவனை கோவிலுக்கு அழைத்துச் சென்ற மனைவி: காதலனை வர சொல்லி தீர்த்துக் கட்டிய கொடூரம்

Tamil nadu India Andhra Pradesh Crime
By Thiru Jul 17, 2026 06:47 AM GMT
Report

ஆந்திர மாநிலம் சித்தூரில் கோவிலுக்கு அழைத்துச் சென்று கணவனை காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 23 வயது ரமேஷ் என்பவருக்கும், 19 வயது ஹாசினி என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இதற்கிடையில் ஹாசினிக்கு அவரது நண்பரான யுகந்தருடன்(20) தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து ரமேஷை கொல்லவும் திட்டமிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், அம்மாவாசை நாளான செவ்வாய்க்கிழமை அன்று கணவன் ரமேஷை மல்லப்பா கொண்டையில் உள்ள ஶ்ரீ மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு அழைத்துச் செல்லுமாறு மனைவி ஹாசினி வற்புறுத்தியுள்ளார்.

பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதிய ரயில்: 3 பேர் உயிரிழப்பு

பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதிய ரயில்: 3 பேர் உயிரிழப்பு

ரமேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்து கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய வழியில் மனைவி ஹாசினி தன்னுடைய கையில் இருந்த கைப்பையை கீழே போட்டுள்ளார்.

அதை எடுப்பதற்காக ரமேஷ் பைக்கை நிறுத்திய போது புதருக்குள் மறைந்திருந்த காதலன் யுகந்தர் ரமேஷை சுற்றி வளைத்து காட்டுப் பகுதிக்குள் வைத்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

கணவனை கோவிலுக்கு அழைத்துச் சென்ற மனைவி: காதலனை வர சொல்லி தீர்த்துக் கட்டிய கொடூரம் | Wife And Lover Plot Husband Death In Chittoor

கைது நடவடிக்கை

ரமேஷ், ஹாசினி மற்றும் அவர்களது குழந்தை யாரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தாயார் பொலிஸாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் ஹாசினியும் ரமேஷும் கோவிலுக்கு வந்ததும், பின்னர் ஹாசினி அதே இருசக்கர வாகனத்தில் ஹாசினி வேறு இரண்டு ஆண்களுடன் செல்வதும் பதிவாகியிருந்தது.

கணவனை கோவிலுக்கு அழைத்துச் சென்ற மனைவி: காதலனை வர சொல்லி தீர்த்துக் கட்டிய கொடூரம் | Wife And Lover Plot Husband Death In Chittoor

மேலும், ஹாசினியின் செல்போன் அழைப்புகள் மற்றும் இருப்பிட தரவுகளை ஆய்வு செய்து கொலை நடந்த இடத்தையும் ரமேஷின் உடலையும் கண்டுபிடித்தனர்.

தற்போது கொலை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள 4 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே சமயம் ஹாசினிக்கு திருமணம் நடைபெற்ற போது அவர் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துக் கொண்டிருந்ததாகவும், அவர் மைனராக இருந்த போது திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US