மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள்
உக்ரைனிலிருந்து அகதியாக வந்த ஒரு அழகிய இளம்பெண்ணுக்காக, பத்து ஆண்டுகள் உடன் வாழ்ந்து, இரண்டு மகள்களையும் பெற்றுக்கொடுத்த மனைவியைக் கைவிட்டார் ஒரு பிரித்தானியர்.
உக்ரைனிலிருந்து அகதிகளாக வருவோருக்காக பிரித்தானியர்கள் தங்கள் வீடுகளில் இடம் அளிக்க முன்வந்த நிலையில், டோனி (Tony Garnett, 29), லோர்னா (Lorna, 28) என்ற தம்பதியரும், சோபியா (Sofiia Karkadym, 22) என்ற உக்ரைனிய இளம்பெண்ணுக்கு தங்கள் வீட்டில் இடமளித்தார்கள்.
ஆனால், டோனிக்கும் அந்தப் பெண்ணுக்கும் காதல் பற்றிக்கொண்டது. பத்து ஆண்டுகள் தம்பதியர் சேர்ந்து வாழ்ந்து இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்த நிலையில், சோபியா குடும்பத்துக்குள் வந்ததைத் தொடர்ந்து, பத்தே நாட்களில் சோபியாவுக்கும் லோர்னாவுக்கும் இடையில் உரசல் ஏற்பட, கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் சோபியா.
ஆனால், லோர்னா எதிர்பார்க்காத ஒன்றும் நடந்துவிட்டது. ஆம், சோபியாவுடன் டோனியும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இருவரும் தற்போது வாடகை வீடு ஒன்றில் வாழும் நிலையில், தன் கணவரை தன்னிடமிருந்து சோபியா பிரித்துவிட்டார் என குற்றம் சாட்டுகிறார் லோர்னா. இந்த விடயமறிந்த மக்களும் சோபியாவை கரித்துக் கொட்டுவதுடன், அவரை நாடுகடத்தவேண்டும் என்கிறார்களாம்.
ஆனால், உண்மை தனக்கும் தன் குடும்பத்தினருக்கும்தான் தெரியும் என்று கூறும் டோனி, ஏற்கனவே தங்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினை இருந்தது என்றும், சோபியா ஒரு அகதியாக வந்திருக்கிறார், அவருக்கு ஏராளம் அச்சுறுத்தல்கள் வருகின்றன என்றும், அவரை பாதுகாக்கும் கடமை தனக்கு இருப்பதாகவும், முன்பு தனக்கு சரியான தூக்கம் கூட இல்லாமல் அவதியுற்ற நிலையில், இப்போது தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் கூறுகிறார்.
டோனியும் லோர்னாவும் 2014 முதல் சேர்ந்து வாழ்ந்தாலும், இதுவரை இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.