5 ரூபாய் குர்குரேவால் குடும்பத்திற்குள் உருவான பிரச்சனை.., விவாகரத்து கேட்ட மனைவி
5 ரூபாய் மதிப்புள்ள குர்குரே என்னும் பண்டத்தை கணவர் வாங்கி வர மறந்ததால், அவருக்கு விவாகரத்து நோட்டீசை மனைவி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சிறுவர்கள் முதல் அனைவரும் விரும்பி உண்ணும் நொறுக்குதீனியாக குர்குரே என்னும் தின்பண்டம் உள்ளது.
இதனை சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று பேசப்பட்டு வந்தாலும் அதனை விரும்பி உண்டு வருகின்றனர்.
அந்தவகையில், குர்குரே பாக்கெட்டை கணவர் வாங்கி வராததால் மனைவி ஒருவர் அவரை பிரிவதற்கு முடிவெடுத்துள்ளார்.
குர்குரேவால் எழுந்த பிரச்சனை
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குர்குரே மீது அதிக நாட்டம் இருந்துள்ளது. அவர் தனது கணவரிடம் தினமும் ஒரு குர்குரே பாக்கெட் வாங்கிவர வேண்டுமென்று வற்புறுத்தியுள்ளார்.
பின்னர், ஒருநாள் மனைவிடம் எழுந்த வாக்குவாதம் காரணமாக குர்குரேவை வாங்கி வர கணவர் மறந்துள்ளார். இதனால், கணவரிடம் சண்டையிட்டு கிளம்பி தனது பெற்றோர் வீட்டிற்கு மனைவி சென்றுள்ளார்.
இதையடுத்து, சில நாள்கள் கழித்து தனக்கு கணவனிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். மேலும், தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக முறையிட்டுள்ளார்.
ஆனால், இதனை கணவர் மறுத்துள்ளார். இதையடுத்து, குடும்பநல ஆலோசனை மையத்திற்கு இருவரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்களிடம் பேசிய ஆலோசகர் தெரிவிக்கையில், "மனைவிக்கு நொறுக்குத்தீனி மீது இருந்த விருப்பமே கணவரை பிரிவதற்கு காரணமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |