குடும்ப பிரச்சனையில் கணவரின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி
குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரின் நாக்கை மனைவி கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் செயல்
இந்திய மாநிலமான பீகார், கயா அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் மனைவியை கணவர் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவரை கீழே தள்ளியுள்ளார். பின்னர், அவரின் மீது ஏறி உட்கார்ந்து கணவரின் நாக்கை கடித்து மென்று விழுங்கியுள்ளார்.
இதனால், வலியில் கணவர் அலறி துடித்துள்ளார். இவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கணவன் மீது மனைவி உட்கார்ந்து கொண்டு இருந்தார்.
மேலும், அவரது வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது. பின்னர் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலைக்கு சென்றார். இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |