பிரியாணி வாங்கிவிட்டு வர லேட் ஆனதால் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி
கணவர் தாமதமாக பிரியாணி வாங்கிவிட்டு வந்ததால் மனைவி விபரீத முடிவு எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி விபரீத முடிவு
புதுச்சேரி, வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கற்பக வினாயகர் சிட்டியை சேர்ந்த தம்பதியினர் ரமேஷ் மற்றும் மீனா (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதில் ரமேஷ், திருக்காஞ்சி பகுதியில் வீடு ஒன்று வாங்கி அதனை சரிசெய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். அதற்காக, தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
இதனிடையே, மீனா சமையல் செய்யாமல் இருந்தார். இதனால், வில்லியனூருக்கு சென்று 1 மணிக்கு பிரியாணி வாங்கி வருவதாக ரமேஷ் கூறியுள்ளார்.
ஆனால் அவர் 3 மணிக்கு பிரியாணி வாங்கிவிட்டு வந்ததால் மீனா கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்துள்ளார்.
பின்னர், வெளியில் சென்ற ரமேஷ் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மின் விசிறியில் வைத்து புடவையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இதனை கட்டு அதிர்ச்சியடைந்த அவர் மனைவியை மீட்டு வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |