கணவன் சொக்லெட் வாங்கி தரவில்லை., மனைவி தற்கொலை!!
கணவன் சொக்லெட் வாங்கி வரவில்லை என்று மனைவி தற்கொல செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று கர்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
நடந்தது என்ன?
கர்நாடக மாநிலத்தில் சககார நகரில் உள்ள சலூன் ஒன்றில் பணிபுரிபவர் தான் கௌதம். இவரது மனைவியின் பெயர் தான் நந்தினி.
இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வருவது வழக்கமாகவே இருந்துள்ளது.
வழக்கம் போலவே காலையில் கௌதம் வேலைக்கு சென்றுள்ளார்.. அப்போது தான் வீட்டிற்கு வரும் பொழுது சொக்லெட் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
கௌதமும் அதற்கு ஒப்புக் கொண்டு “சரி வாங்கி வருகிறேன்” என்று கூறி புறப்பட்டுள்ளார்.
இருப்பினும், நந்தினி பலமுறைகள் கௌதமுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த நிலையில் கௌதம் நிராகரித்துள்ளார். ஆகவே கோபம் அடைந்த நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
நந்தினி இறுதியாக வாட்ஸ்அப் மூலம் கௌதமுக்கு கூறியது என்ன?
இரவு 11.45 மணியளவில் 'நான் போகிறேன். சீக்கிரம் வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விடுங்கள். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று வாட்ஸ்அப் மூலம் செய்து அனுப்பியுள்ளார்.
இதை பார்த்த கொளதம் பதறியடித்து வீட்டிற்கு வந்த நிலையில் தான் பேரதிர்ச்சி காத்திருந்தது. நந்தினி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
மேலும் நந்தினியின் குடும்பத்தார்கள் கௌதம் மீது எந்தவொரு புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.