மனைவியை நிர்வாணமாக்கி ஊர்வலம்! கணவரின் கொடூர செயல்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் மனைவியை நிர்வாணமாக்கி கிராமத்தினர் முன்னிலையில் ஊர்வலம் நடத்திய கணவரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை நிர்வாணமாக்கிய கணவன்
ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்நகரில் உள்ள பெண்ணுக்கு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழங்குடியின பெண் ஒருவருக்கு திருமணத்திற்கு பிறகு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்ததாக அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால், இந்த பெண் அவரது மாமியாரின் ஊருக்கு நேற்று கடத்தப்பட்டார்.
பின்பு, அவரது கணவர் ஊரார் முன்னிலையில் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திச் சென்றார்.
அப்போது, அந்த பெண் கதறியழுததை கூட பொருட்படுத்தாமல் அவரது உடைகளை அவிழ்த்து, நிர்வாணமாக்கிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் கண்டனம்
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாகரிகமான இந்த சமுதாயத்தில் குற்றவாளிகளுக்கு இடமில்லை என்றும் கூறியுள்ளார்.
प्रतापगढ़ जिले में पीहर और ससुराल पक्ष के आपसी पारिवारिक विवाद में ससुराल पक्ष के लोगों द्वारा एक महिला को निर्वस्त्र करने का एक वीडियो सामने आया है।
— Ashok Gehlot (@ashokgehlot51) September 1, 2023
पुलिस महानिदेशक को एडीजी क्राइम को मौके पर भेजने एवं इस मामले में कड़ी से कड़ी कार्रवाई के निर्देश दिए हैं।
सभ्य समाज में इस…
இச்சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில்,"குற்றவாளிகளை கண்டுபிடிக்க 6 குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், இது தொடர்பான பணிகள் நடைபெறுகிறது என்றும்" கூறினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |