நண்பர்களை விருந்துக்கு அழைத்த பிரித்தானிய தம்பதியர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: உண்மை தெரியவந்தது...
பிரான்சில் தங்கள் நண்பர்கள் சிலரை விருந்துக்கு அழைத்த பிரித்தானிய தம்பதியர் நீச்சல் குளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், என்ன நடந்தது என்ற உண்மை வெளியாகியுள்ளது.
கோடீஸ்வரரான David (82), தன் மனைவியான Diana Shamash (80)உடன் விடுமுறையில் தாங்கள் தங்கும் தெற்கு பிரான்சிலுள்ள Hérault என்ற இடத்தில் அமைந்திருக்கும் தங்கள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
தம்பதியர், அக்கம்பக்கத்திலுள்ளவர்களை, இரவு தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரவேண்டும் என அழைத்துள்ளார்கள். அதன்படி விருந்துக்கு வந்தவர்கள் தம்பதியரை அழைத்தும் யாரும் வெளியே வராததால், அவர்கள் வீட்டுக்குள் சென்று தேட, கடைசியில் வீட்டின் பின்னாலுள்ள நீச்சல் குளத்தில் தம்பதியர் இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள் உடனடியாக பொலிசாருக்குத் தகவலளித்துள்ளனர்.
Credit: Flickr
தற்போது அந்த பிரித்தானிய தம்பதியர் உயிரிழந்தார்கள் என்பத் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. நீச்சல் குளத்தில் இறந்து கிடந்த Diana, முழு உடையில், ஷூக்கள் வரை அணிந்து உயிரிழந்துகிடந்துள்ளார்.
கடுமையான வெயில் நிலவும் சூழலில் நீச்சல் குளத்தில் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்த Davidக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் துடிதுடிப்பதைக் கண்ட Diana உடனடியாக தண்ணீரில் குதித்திருக்கிறார். ஆனால், அவர் நீச்சல் உடையில் இல்லாமல், ஷூக்கள் முதல் முழு உடை அணிந்திருந்ததால் உடை நனைந்து பழுவாகி, அவரால் தண்ணீரில் மிதக்க முடியாமல் அவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Credit: Facebook
இப்போது ஒரே கேள்வி, Davidக்கு திடீரென எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்பதுதான்.
ஆக, அந்த நீச்சல் குளத்திலிருந்த தண்ணீர் வெப்பப்படுத்தப்பட்டதா? அப்படி அந்த தண்ணீர் வெப்பப்படுத்தப்படாமல் இருந்ததால், அந்த குளிர்ந்த நீர் காரணமாக Davidக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.