பெங்களூருவில் தந்தை, 4 வயது மகன் படுகொலை: காதலனுடன் இணைந்து மனைவி நடத்திய கொடூரம்
பெங்களூருவில் கணவன் மற்றும் 4 வயது மகனை காதலனுடன் இணைந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மற்றும் மகனை கொன்ற மனைவி
பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்பனாவாராவில்(Chikkabanavara) 34 வயது கணவன் அபிநந்தன் மற்றும் அவரது 4 வயது மகன் யதுவீர் இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.
பொலிஸார் விசாரணையில், மனைவி ஹரிணிக்கும் கணவன் அபிநந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஹரிணி கரண்டியால் அபிநந்தனை தாக்கியுள்ளார்.
இதையடுத்து இருவரும் தனித்தனி அறைகளுக்கு சென்ற நிலையில், ஹரிணி தன்னுடைய காதலன் வினய்யை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

மேலும் வினய் வருவதற்கு முன்னதாக வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஹரிணி அணைத்துள்ளார்.
பின்னர் இருவரும் இணைந்து அபிநந்தனை தாக்கி மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளனர்.
வீட்டில் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு எழுந்த 4 வயது சிறுவன் யதுவீரையும் சாட்சி இல்லாமல் செய்வதற்காக தலையணையை வைத்து அமுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மனைவி ஹரிணி உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த முழு கொலைச் சதியும் தெரியவந்துள்ளது.
தலைமறைவாக உள்ள காதலன் வினய் கைது செய்யப்பட்ட பிறகே இந்த சம்பவம் தொடர்பான முழு உண்மையும் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |