அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம்
பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், 1981 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் 2015 - 2017 காலகட்டத்தில் கர்நாடகா மாநில டிஜிபியாகவும் பணியாற்றினார்.
முன்னாள் டிஜிபி கொலை
68 வயதான ஓம் பிரகாஷ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கர்நாடக மாநிலம் பெங்களூரில் தென்கிழக்கு எச்.எஸ்.ஆர்.லே அவுட் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுகிழமை மாலை ஓம் பிரகாஷ் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
இது தொடர்பாக, ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது மகளிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சம்பவதினத்தன்று, தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கண்ணில் மிளகாய் பொடியை தூவிவிட்டு கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார் என தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் பல்லவி, தனது நண்பரை அழைத்து அரக்கனை கொன்று விட்டேன் என தெரிவித்துள்ளார்.
சொத்து தகராறு
இது குறித்து பேசிய அவரது மகன், தனது தந்தையை கொலை செய்து விடுவதாக முன்னரே மிரட்டல் விடுத்திருந்தார். இதன் காரணமாக அவரது தங்கையின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய இளைய சகோதரி, அங்கிருந்து மீண்டும் தந்தையை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். இதனால் அவரையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
சில வருடங்களாகவே, கர்நாடகாவின் தண்டேலியில் நிலம் தொடர்பான சொத்து தகராறு இவர்களுக்கிடையே நடந்து வந்தது.
2 வருடங்களுக்கு முன் ஓம் பிரகாஷ் அங்கு வாங்கிய சொத்தை தனது தங்கைக்கு எழுதி வைத்துள்ளார்.
இதற்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்திருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |