7 வயது மகன் முன்பு கணவரை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி
7 வயது மகன் முன்பு கணவரை கொன்றுவிட்டு மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் செயல்
இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத் நகரைச் சேர்ந்த தம்பதியினர் முகேஷ் பர்மர் மற்றும் சங்கீதா. இதில் கணவர் முகேஷ் பர்மர் ஏ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற நாளில் இருவருக்கும் காலையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த சங்கீதா கணவரை தாக்கியுள்ளார். இதில் கணவர் உயிரிழந்துள்ளார். இதனால் தனது உயிரையும் அவர் மாய்த்துக் கொண்டுள்ளார்.
மேலும், சங்கீதா தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை பொலிஸார் கைப்பற்றினர்.
அக்கடிதத்தில் திருமணம் மற்றும் நிதி பிரச்சனைகள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை மற்றும் உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக சங்கீதா கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |