கணவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி! தோழி, காதலனுடன் சேர்ந்து கொலை..அம்பலமான உண்மை
தமிழக மாவட்டம் சேலத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்ததையடுத்து, காதலன் மற்றும் தோழியுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார்.
தற்கொலை என தகவல்
சேலம் ஜலகண்டாபுரம் அருகேயுள்ள மலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (32). இவரது மனைவி நிவேதா (27) ஆவார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் சுந்தரராஜ் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொலிஸாருக்கு எழுந்த சந்தேகம்
ஆனால் சுந்தரராஜன் கழுத்தில் காயங்கள் இருந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பட்ட தகவல்கள் இருந்ததால் பொலிஸாருக்கு நிவேதா மீது சந்தேகம் எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். முதலில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது நிவேதா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், தோழி வித்யாவின் யோசனையின் பேரில் மூவரும் கூட்டு சுந்தரராஜை கொலை செய்துள்ளனர் என்பது அம்பலமானது.
Representational/File
கொலை
நிவேதா-தினேஷ் இடையேயான பழக்கத்தை சுந்தரராஜ் கண்டித்ததால், வித்யாவின் அறிவுறுத்தலின்படி அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுந்தரராஜுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்த பின்னர், நிவேதா காதலரை வரவழைத்துள்ளார். அவர் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடியுள்ளார்.
பின்னர் தலையணையால் அமுக்கி சுந்தரராஜை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் உடலை சேலையில் கட்டி மின்விசிறியில் தொங்க விட்டு தற்கொலை நாடகம் ஆடியுள்ளனர்.
இந்த நிலையில் மூவரிடம் தனித்தனியாக பொலிஸார் விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |