பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த மனைவி.., பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா?
பிரபல நிகழ்ச்சியான ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல்
சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்த மாதம் பிரீமியருக்கு தயாராகி வருகிறது.
பிரீமியருக்கு முன்னதாக இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையக்கூடியவர்கள் யார் யார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் மனைவி ஹிமான்ஷி நர்வாலை பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பதற்கு தயாரிப்பாளர்கள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 22-ம் திகதி அன்று தேனிலவுக்காக பஹல்காம் சென்ற கடற்படை அதிகாரி வினய் நர்வால் பயங்கரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி ஹிமான்ஷி கதறி அழுத சம்பவம் இணையத்தில் பெரிதளவில் பேசப்பட்டது.
யூடியூபர் எல்விஷ் யாதவ் தனது ஒரு வீடியோ பதிவில், ஹிமான்ஷி தனது கல்லூரித் தோழி என்று பகிர்ந்து கொண்டார். மேலும், "டெல்லியின் குர்கான், என் நகரம். நாங்கள் ஒன்றாக மெட்ரோ நிலையத்திற்குச் செல்வோம். என்னிடம் அவருடைய எண் இருந்தது. கணவரை இழந்து தவிக்கும் அவரை அழைத்து பேச தயக்கமாக இருக்கிறது" என்றார்.
ஹிமான்ஷி பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் பிக் பாஸ் 19க்கான பேச்சு வார்த்தைகளில் ஷைலேஷ் லோதா, குருசரண் சிங், முன்முன் தத்தா, லதா சபர்வால், பைசல் ஷேக், ஜன்னத் ஜுபைர், புரவ் ஜா, அபூர்வா முகிஜா மற்றும் பலர் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |