கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்ட்டாரு! பொய்யாக கூறிய மனைவி... 2 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமான கொடூர சம்பவம்

investigation
By Raju Apr 13, 2021 02:51 AM GMT
Report

கணவர் வெளிநாட்டுக்கு வேலை சென்றுவிட்டதாக மனைவி கூறி வந்த நிலையில் அவர் ஏற்கனவே கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது. 

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் கழுத்து அறுப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காததால் பொலிசார் அதை கிடப்பில் போட்டனர். இந்த நிலையில் மாவட்டத்துக்கு புதிய உயர் அதிகாரியாக முகேஷ் ஜெயக்குமார் பொறுப்பேற்ற நிலையில் அந்த கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கினார்.

கொலை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மதுபாட்டிலின் பெயர் மற்றும் சீரியல் எண் அடைப்படையில் விசாரித்த போது அந்த வகை மதுபாட்டில் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டது என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதிகளுக்கு கொலையான இளைஞர் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டது கூல்டிரிங்க் கடை நடத்தி வந்த வியாபாரி சுப்புராஜ் என தெரிந்தது.

சுப்புராஜ், ஜெயலலிதா என்பவரின் மகளான அன்னலட்சியை திருமணம் செய்த பின்னர் கூல்டிரிங்க் கடை நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுப்புராஜ் குறித்து அன்னலட்சுமியிடம் பொலிசார் விசாரித்த போது கணவர் வெளிநாடு சென்றுள்ளார் என கூறியிருக்கிறார்.

கணவர் காணாமல் போன நிலையில் ஏன் பொலிசில் புகார் அளிக்காமல் வெளிநாடு போயிருப்பதாக பொய் சொன்னார் என்று விசாரித்த போது அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.

அதன்படி சுப்புராஜுக்கும் , அருகில் காய்கறிக்கடையில் வேலை பார்த்த கனகராஜ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

சுப்புராஜ், தனது மனைவி அன்னலட்சுமியை கடையில் விட்டு செல்லும் போது கனகராஜுடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் தங்கள் காதலுக்கு சுப்புராஜ் இடையூறாக இருப்பதாக நினைத்து தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் திகதி சுப்புராஜை, கனகராஜ் தங்கள் ஊர் திருவிழாவுக்கு அழைத்துச்சென்றுள்ளான்.

ஊருக்கு புறப்பட்டு செல்லும் போதே திருப்பூரில் மதுவாங்கிச்சென்றுள்ளனர், ஊருக்கு வெளியே மறைவான இடத்தில் கூட்டாளிகள் உடன் சேர்ந்து சுப்புராஜுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து அவருக்கு போதை தலைக்கேறியதும், கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக, கனகராஜ், அன்னலட்சுமி, ஜெயலலிதா மற்றும் 3 கூட்டாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US