3 முறை.. கணவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த பிரித்தானியா பெண்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்
பிறந்தநாளில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது கணவரை மூன்று முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா Parsonage சாலையில் உள்ள Somerset பகுதியில் வாழ்ந்து வருபவர் டேவிட் ஜாக்சன் (78). இவரது மனைவி பெனிலோப்பி ஜாக்சன்(66).
கடந்த பிப்ரவரி மாதம், ஜாக்சன் தனது பிறந்தநாளைக் கொண்டாட தங்கள் மகள் வாங்கிய விலையுயர்ந்த நண்டு, இறால் மற்றும் மாமிசத்துடன் சாப்பிட காய்கறிகள் தயாரித்தபோது தம்பதியினர் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
இந்நிலையில் சிறிய சண்டை பெரிய சண்டையாக வெடித்தது. ஒரு கட்டத்தில் பயங்கர கோவம் அடைந்த பெனிலோப்பி சமையலறையில் உள்ள கத்தியை எடுத்து தனது கணவரை மூன்று முறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதையடுத்து கணவரை கொலை செய்த வழக்கில் பெனிலோப்பி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு 8 மாதங்களாக கோர்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் 1 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சுமார் 18 வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.