தமிழக வீரர் நடராஜனின் மனைவி யார்? இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்... தம்பதியின் அழகான புகைப்படங்கள்
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.
கிரிக்கெட் மீது கொண்ட வெறியால் அயராது உழைத்து கடும் முயற்சி காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார் நடராஜன்.
நடராஜனுக்கும் பவித்ரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ஆம் ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி அழகான பெண் குழந்தை பிறந்தது.
நடராஜனின் இந்த வெற்றிக்கு பின்னால் பவித்ராவும் உள்ளார், அவர் தொடர்ந்து நடராஜனை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார்.
பவித்ராவும், நடராஜனும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பவித்ராவும் சேலத்தை சேர்ந்தவர் தான், நடுத்தர குடும்பத்தரை சேர்ந்த அவரும் நடராஜனும் சிறுவயதில் இருந்தே ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம் ஆனவர்கள்.
அதாவது நடராஜனும், பவித்ராவும் ஒரே பள்ளியில் படித்த போதே காதலில் விழுந்துள்ளனர். இந்த காதல் தான் பிற்காலத்தில் திருமணத்தில் முடிந்திருக்கிறது.
சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா அடிக்கடி கணவரின் புகைப்படத்தை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
நடராஜன் விளையாடும் போட்டிகளை நேரில் சென்று பார்க்கும் பழக்கம் கொண்ட பவித்ரா கணவரை தொடர்ந்து உற்சாகமப்படுத்தி வருகிறார்.