சுவிட்சர்லாந்தில் கணவரைக் கொல்ல பணம் கொடுத்த மனைவி: தொலைக்காட்சி நிகழ்ச்சியால் சிக்கிய குற்றவாளிகள்
சுவிட்சர்லாந்திலுள்ள ஏரி ஒன்றில் பல ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டவர் ஒருவரின் உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கு பொலிசாருக்கு பெரும் சவாலாக அமைந்தது.
2007ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உடல்
2007ஆம் ஆண்டு, Thurgau மாகாணத்திலுள்ள ஏரி ஒன்றில், 27 வயதுடைய எகிப்து நாட்டவர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் துப்பாக்கிக்குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் நீண்டகாலமாக குற்றவாளிகள் சிக்காமலே இருந்துவந்தனர்.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டு, ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்றில், அந்த வழக்கு தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக, பொலிசாருக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்தது.
அதன் அடிப்படையில், தற்போது ஹொட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவரும், கட்டுமானப் பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட அந்த எகிப்து நாட்டவர், தன் மனைவியைக் கொடுமைப்படுத்திவந்ததாகவும், ஆகவே, அந்தப் பெண் இந்த இருவருக்கும் பணம் கொடுத்து, தன் கணவரைக் கொலை செய்யக்கோரியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், கொலை செய்யச் சொல்லி பணம் கொடுத்ததாகக் கூறப்படும் அந்தப் பெண்ணும், 10 ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை மரணமடைந்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |