ரோகித் சதம் அடிப்பதற்குள்... மனைவி ரித்திகா பட்ட பாடு! கமெராவில் சிக்கிய காட்சிகள்
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா சதம் அடித்த நிலையில், மனைவி ரித்திகா அதற்கு முன்பு எப்படியெல்லாம் ரியாக்ஷன் கொடுத்தார் என்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்திய அணி சற்று முன் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 272 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
அதிகபட்சமாக ரோகித்சர்மா 161 ஓட்டங்களும், ரஹானே 67 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்நிலையில் இப்போட்டியில் ரோகித்சர்மா 90 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அடுத்த 10 ஓட்டங்கள் அடிப்பதற்குள் மிகவும் சிரமப்பட்டார். அவரும் பல ஷாட்களை ஆடிப்பார்த்தார், ஆனால் பந்தானது அவர் நினைத்தது போன்று செல்லவில்லை. வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...
இதை மைதானத்தின் பார்வையாளர் இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரித்திகா பல் ரியாக்ஷன்களை கொடுத்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.