நான் தனியாக வாழ்ந்துக்கறேன் என கூறிவிட்டு கணவரை பிரிந்த 28 வயது மனைவி! அவரை நைசாக நோட்டமிட்ட கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
தமிழகத்தில் 28 வயதான மனைவியை கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் ராமச்சந்திரன் என்ற சந்துரு (29). இவர் மனைவி மலர்கொடி (28). தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மலர்க்கொடி கோபமடைந்த நிலையில் நான் தனியாக வாழ்ந்து கொள்கிறேன் என கூறிவிட்டு தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சந்துரு தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்தும் அவர் வரவில்லை. இந்த நிலையில் மலர்க்கொடிக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மலர்க்கொடி தனது குழந்தைகளுடன் பணகுடி அருகே உள்ள கலந்தபனையில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.
மலர்கொடியை பிரிந்து வாழ்ந்தாலும் அவரின் நடவடிக்கைகளை தொடர்ந்து நோட்டமிட்டு வந்திருக்கிறார் சந்துரு. இந்த நிலையில் அந்த வாலிபர், தனது மனைவி வீட்டுக்கு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த சந்துரு நேராக மனைவியிடம் சென்று இது தொடர்பாக பேசினார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்துரு மலர்க்கொடியை கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் மலர்க்கொடி பரிதாபமாக இறந்தார்.
பின்னர் சந்துரு பொலிசில் சரணடைந்தார்.
இதையடுத்து சந்துருவை கைது செய்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று மலர்க்கொடி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.