மதுபோதையில் தகராறு செய்த கணவனை தள்ளிவிட்ட மனைவி..கீழே விழுந்து உயிரிழப்பு
சென்னையில் மதுபோதையில் இருந்த கணவனை மனைவி தள்ளிவிட்டதில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருபவர் கனகவள்ளி. இவர் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் மதுப்பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கனகவள்ளி காவல்நிலையத்திற்கு சென்று தனது கணவரை தள்ளிவிட்டதில் உயிரிழந்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.
Getty Images/iStockphoto
அவரிடம் விசாரணை நடத்தியபோது, மதுபோதையில் வந்த தன் கணவர் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார் எனவும், அப்போது கனகவள்ளி அவரை தள்ளிவிட்டுள்ளார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக தற்காப்புக்காக தள்ளியது உறுதியானது. அதனைத் தொடர்ந்து சட்டப்பிரிவு 100யின் கீழ் கனகவள்ளியை விடுவிக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |