சிறிது நேரத்தில் தான் கணவனால் கொல்லப்படப்போவது தெரியாமல் இளம் மனைவி செய்த செயல்...
பிரித்தானியாவில் கர்ப்பிணிப்பெண்ணொருவர் கணவனால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சிறிது நேரத்தில் தான் கொல்லப்படப்போவது தெரியாமல், அந்தப் பெண் கணவனுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).
(Image: Daily Record)
பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது.
உடற்கூறு ஆய்வில், ஃபவ்ஸியாவின் உடலில் அவர் தாக்கப்பட்டதற்கு ஆதாரமாக பல அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முன்பு பலமுறை அன்வர் ஃபவ்ஸியாவை தாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், அன்வர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அவர் மீது கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
( Image: Yasmin Javed / SWNS)
கணவனுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்ததாக தகவல்
இந்நிலையில், தான் சிறிது நேரத்தில் தன் கணவனாலேயே பயங்கரமான முறையில் கொல்லப்படப்போவது தெரியாமல், ஃபவ்ஸியா தன் கணவனுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
ஃபவ்ஸியாவின் மொபைலில், அவர் கொல்லப்பட்ட அன்று இரவு 8.06 மணி முதல் 8.30 வரை, அவர் தன் கணவரான அன்வருடன் எடுத்துக்கொண்ட செல்பிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(Image: Fawziyah Javed)
(Image: PA)