லஞ்சம் வாங்கிய மனைவி.., வீடியோ வெளியிட்டு காட்டி கொடுத்த கணவன்
நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வந்த தனது மனைவி லஞ்சம் வாங்கியதை கணவரே வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் வாங்கிய மனைவி
இந்திய மாநிலமான தெலங்கானா, மணிகொண்டா நகராட்சியில் பொறியாளராக பணியாற்றுபவர் திவ்யா ஜோதி. இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், நகராட்சியில் பணிபுரியும் திவ்யா ஜோதி லஞ்சம் வாங்கி வந்துள்ளார். அதனை தெரிந்து கொண்ட கணவர் அவரை எச்சரித்துள்ளார்.
ஆனால், திவ்யா ஜோதி கேட்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவி லஞ்சம் வாங்கிய பணத்தை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அவருடைய மனைவி ஒவ்வொரு இடத்திலும் லஞ்ச பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். பீரோ, அலமாரி, பூஜை அறையில் சாமி படங்களுக்கு பின்னால், ஷூ ஸ்டாண்ட், வேஸ்ட் பேக் ஆகிய எல்லா இடங்களிலும் லஞ்ச பணம் நிறைந்துள்ளது.
இந்த வீடியோவின் மூலம், அவருடைய மனைவி ரூ.80 லட்சம் பணத்தை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நகராட்சி பெண் அதிகாரியான திவ்யா ஜோதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |