கனேடிய மாகாணமொன்றில் இரண்டாவது முறையாக சிறுவர்களைத் தாக்கிய வனவிலங்கு
கனடாவின் மனித்தோபாவில் ஒரே வாரத்தில் இரண்டுமுறை சிறுவர்கள் விலங்கு ஒன்றின் தாக்குதலுக்குள்ளாகியுள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபிள்ளைகளைத் தாக்கிய விலங்கு
கனடாவின் மனித்தோபா மாகாணத்திலுள்ள வின்னிபெகில், வெள்ளிக்கிழமையன்று நான்கு வயது குழந்தை ஒன்றை குள்ளநரி வகை விலங்கொன்று (coyote) தாக்கியுள்ளது.
அந்தக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளது.
இரண்டாவது சம்பவம்
கடந்த மாதம், அதாவது, ஜூன் 24ஆம் திகதியும், ஒன்பது வயது சிறுவன் ஒருவன் அதே வகை விலங்கினால் தாக்கப்பட்டுள்ளான். தலையில் தையல்கள் போடும் நிலைக்காளான அந்தச் சிறுவன் தற்போது குணமடைந்துவருகிறான்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். ஒரே வராத்தில் இரண்டு பிள்ளைகள் தாக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், அந்த விலங்கைக் கண்டால், உரத்த சத்தம் எழுப்புவது மற்றும் பெரிய துணி ஒன்றை எடுத்து ஆட்டி நம்மை பெரிய உருவம் போல காட்டிக்கொள்வது அவற்றை அச்சுறுத்த உதவும் என்கிறார்கள் வனத்துறை நிபுணர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |