தமிழ்நாட்டில் யானை தாக்கி ஜேர்மன் சுற்றுலா பயணி பலி: வெளியான அதிர்ச்சி வீடியோ
தமிழ்நாட்டில் காட்டு யானை தாக்கியதில் ஜேர்மன் சுற்றுலா பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜேர்மன் சுற்றுலா பயணியை தாக்கிய யானை
தமிழ்நாட்டின் வால்பாறை புலிகள் பள்ளத்தாக்குப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 77 வயதான ஜெர்மன் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார்.
மைக்கேல் ஜுர்சென்(Michael Jurcen) என்ற அந்த சுற்றுலா பயணி செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் அப்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
In India, a wild elephant pierced a German tourist with its tusk
— NEXTA (@nexta_tv) February 5, 2025
According to Bild, the animal attacked and killed a 77-year-old tourist from Germany. The pensioner reportedly ignored warnings and tried to pass the animal on his motorcycle. The elephant then became frightened… pic.twitter.com/1XFSsDx042
சாலையில் மஸ்து யானை ஒன்று குறுக்கிட்டதால், மற்ற வாகனங்கள் நின்று எச்சரிக்கை சமிக்ஞை செய்தன. ஆனால், ஜுர்சென் எச்சரிக்கையை மீறி முன்னேறியுள்ளார்.
எச்சரிக்கையை புறக்கணித்து யானையை நோக்கி சென்ற போது, யானை அவரைத் தாக்கியது.
தனது தும்பிக்கை மற்றும் தந்தங்களைப் பயன்படுத்தி ஜுர்சனையும் அவரது மோட்டார் சைக்கிளையும் சாலையில் இருந்து தூக்கி வீசியது.
பறிப்போன சுற்றுலா பயணி உயிர்
இந்த தாக்குதலில் ஜுர்சனின் கைகள் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
அவர் முதலில் வாட்டர்ஃபால்ஸ் எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், மருத்துவ முயற்சிகள் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
சக பயணி ஒருவர் எடுத்த வீடியோவில், ஜுர்சென் எச்சரிக்கையை மீறி சென்றதையும், அதன் பின்னர் யானை தாக்கியதையும் பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |