பிரான்சில் பாரிய காட்டுத்தீ மேலும் பரவக்கூடும்! எச்சரிக்கை விடுப்பு
*பிரான்சின் தென்மேற்கு பகுதியில் காட்டுத்தீ மேலும் பரவக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
*கடந்த வாரம் பிரான்சில் ஏற்பட்ட காட்டுத்தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Bordeaux நகரின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயை அணைக்க 1,100 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்
பிரான்சில் காட்டுத்தீ பரவல் காரணமாக அப்பகுதியில் வெப்பநிலை 40 செல்சியஸ் ஆக இருக்கலாம் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.
தீ பரவுவதைத் தடுக்க இரவு முழுவதும் போராடியதாகவும், குறிப்பாக டெலின்-பெலியட் கிராமத்தைப் பாதுகாக்க போராடுவதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரி கூறியுள்ளார்.
PC: Reuters Photo
கடந்த செவ்வாய்கிழமை முதல் காட்டுத்தீயினால் 17 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் காட்டுத்தீ மேலும் பரவக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தரப்பில் கூறுகையில், 'நிலைமைகள் குறிப்பாக கடினமானவை, தாவரங்களும் மண்ணும் விதிவிலக்காக வறண்டவை. வார இறுதியில் கடுமையான வறண்ட வெப்பம் ஏற்படக்கூடும் புதிய வெடிப்புகளுக்கு மிகவும் கடுமையான ஆபத்து உள்ளது' என தெரிவித்துள்ளனர்.
PC: EPA-EFE/REX/Shutterstock
பிரான்ஸ் இந்த கோடையில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை கட்டாயப்படுத்தியுள்ளது.