கனடாவின் முக்கிய நகரத்தில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவு
கனடாவின் வடமேற்கு பிரதேசங்களின் எல்லை அருகே காட்டுத்தீ நெருங்கியுள்ளதை அடுத்து தலைநகரத்தில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
17 கி.மீ தொலைவுக்கு காட்டுத்தீ
வடமேற்கு பிரதேசங்களின் தலைநகரம் மட்டுமின்றி அங்குள்ள ஒரே ஒரு நகரமாகவும் விளங்கும் Yellowknife பகுதிக்கு 17 கி.மீ தொலைவுக்கு காட்டுத்தீ நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
Yellowknife பகுதிக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, Yellowknife பகுதியானது பிராந்திய தலைநகர் மற்றும் 20,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் நகரமாகும்.
இந்த நிலையில் Dettah, Ndilǫ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிரேஸ் லேக், கம் லேக் தொழில்துறை பகுதி மற்றும் எங்கல் வணிக மாவட்ட மக்களும் முதலில் வெளியேற வேண்டும் என அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
எஞ்சிய மக்களுக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் வரையில் வெளியேற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Yellowknife நகர மேயர் ரெபேக்கா அல்டி தெரிவிக்கையில்,
அனைவரும் வெளியேற்றப்படும் வரை
வெளியேற்றும் விமானங்கள் வியாழக்கிழமை மதியம் 1 மணிக்குத் தொடங்கி, அனைவரும் வெளியேற்றப்படும் வரை தொடரும் என்றே குறிப்பிட்டுள்ளார். மேலும், பிராதான சாலைகள் அனைத்தும் திறந்திருக்கும் போது மக்கள் வெளியேற வாய்ப்பாக இருக்கும் என்பதாலையே, தற்போது வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
Courtesy: Paul Flamand
பிரதான சாலைகள் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம், அத்துடன் புகை மூட்டம் காணப்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் சாலையை பயன்படுத்த வேண்டும் என்றார்.
Yellowknife நகரின் 402,000 ஏக்கர் நிலப்பரப்பில் தீ வியாபித்துள்ளது. இந்த கோடையில் மட்டும், வடமேற்கு பிரதேசங்களில் 2 மில்லியன் ஹெக்டேர்களுக்கு மேல் எரிந்து சேதமடைந்துள்ளது. தற்போதும் 236 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |