பிரான்சில் பயங்கரமாக பற்றியெரியும் காட்டுத்தீ... 36,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
தென்மேற்கு பிரான்சில் இரண்டு இடங்களில் பயங்கரமாக காட்டுத்தீ பற்றியெரிந்து வருவதைத் தொடர்ந்து பொதுமக்கள் 36,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த பயங்கர காட்டுத்தீயில் 20,600 ஹெக்டேர் நிலம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீயில் மரங்கள் நாசமான இடங்களில் புதிதாக மரங்கள் நடும் பெரிய திட்டம் ஒன்று கைவசம் இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பற்றியெரியும் தீயை அணைக்கப் போராடும் தீயணைப்புத்துறையினரை ஹீரோக்கள் என புகழ்ந்துள்ள மேக்ரான், தீயை அணைப்பதில்,பொலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து செயலாற்றிய மக்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
Wildfires. Photo: Reuters