அமெரிக்காவில் பரவிவரும் காட்டுத்தீ: ஹரி மேகன் வீட்டுக்கும் அபாயம் என தகவல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் வாழும் பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பமும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறவேண்டியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பரவிவரும் காட்டுத்தீ
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீ வேகமாகப் பரவிவருகிறது. காட்டுத்தீயில் ஏராளமான கட்டிடங்கள் நாசமாகிவிட்டன.
காட்டுத்தீயில் சிக்கி ஐந்து பேர் பலியாகியுள்ள நிலையில், பிரபலங்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுவருகிறார்கள்.
ஹரி மேகன் வீட்டுக்கும் அபாயம் என தகவல்
பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன் மற்றும் பிள்ளைகள் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள Montecito என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்கிறார்கள்.
தற்போது காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் Montecitoக்கும் இரண்டு மணி நேர பயண நேரம்தான்.
இந்நிலையில், அப்பகுதியில் வாழும் சுமார் 70,000 பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.
பிரபலங்கள் பலர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிவரும் நிலையில், இளவரசர் ஹரி குடும்பம் வாழும் வீட்டுக்கும் பிரச்சினை ஏற்படக்கூடும் என கருதப்படுவதால், அவர்களும் தங்கள் வீட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |