வில்லியம்சனை நச்சென்று ரன் அவுட் ஆக்கிய பாகிஸ்தான் வீரர்! வைரலாகும் டோனியின் புகைப்படம்
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் வில்லியம்சன் ரன் அவுட் ஆகிய புகைப்படமும், டோனியின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணியில் துவக்க வீரரான மார்டின் கப்டில்(17), டேரி மிட்சல்(27), கானே வில்லியம்சன்(25), ஜேம்ஸ் நீச்சம்(1)டிவோன் கான்வே(27) எடுத்து வெளியேறினர்.
இவர்களைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகியதால், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹரீஷ் ராப் 4 ஓவரில் 22 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
Game of inches ?
— Ash MSDian ?? (@savageheartttt) October 26, 2021
Then MSD, now Kane Williamson @Msdhoni #KaneWilliamson pic.twitter.com/DYg5h68tmx
இதைத் தொடர்ந்து 135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என ஆடி வரும் பாகிஸ்தான் அணி, சற்று முன் வரை 5.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் கனே வில்லியம்சனை, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி தன்னுடைய துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட் ஆக்கினார்.
#KaneWilliamson Security issues ka banana Bna Kay Bhagty hue Major Hassan Kay Hatho Arrest?♥️#PakvsNz pic.twitter.com/nFWWt2rVt7
— Namal??? (@Moody_hun_yar) October 26, 2021
இதற்கு முன் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் டோனியும் இதே போன்று தான் ஒரு ரன் அவுட் ஆகினார் என்று இந்திய ரசிகர்கள் இந்த இரண்டு புகைப்படத்தையும் பதிவிட்டு டிரண்டாக்கி வருகின்றனர்.