பிரான்சில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா?: ஜனாதிபதி விளக்கம்
பிரான்சின் அண்டை நாடுகளான ஆஸ்திரியா போன்ற நாடுகள், தடுப்பூசி பெறாதவர்களுக்காக தனியாக பொதுமுடக்கம் பொன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் நிலையில், பிரான்ஸில் அப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாகுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
பிரான்ஸ் அப்படி தடுப்பூசி பெறாதவர்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்காது என பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெறாதவர்களுக்கு பொதுமுடக்கம் அறிவித்துள்ள நாடுகள், சுகாதார பாஸ் நடைமுறையை அமுல்படுத்தாத நாடுகள் என்று கூறிய மேக்ரான், ஆகவே, பிரான்சுக்கு இந்த பொதுமுடக்கம் அவசியமில்லை என்று கூறினார்.
நாம் எல்லாருமே தடுப்பூசிக்காக பிரச்சாரம் செய்யும் தூதுவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று கூறும் மேக்ரான், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தை மறுக்கவில்லை.
நோயெதிர்ப்புச் சக்தி குறைபாடு கொண்டவர்கள் மற்றும் முதியோருக்கு பூஸ்டர் டோஸ் பயனுள்ளது என்பது நமக்குத்தெரியும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தேவையானது, பயனுள்ளது என தெளிவாகும்போது, அதையும் நாம் சுகாதார பாஸ் திட்டத்துக்குள் சேர்ப்போம் என்று கூறியுள்ளார் மேக்ரான்.