கொரோனாவால் வங்கதேசத்தில் முழு லாக்டவுன்! இலங்கை கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு அந்த அணி வருமா?
வங்கதேசம் - இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரை ரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த இன்னும் தீர்மானிக்கவில்லை என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கை - வங்கதேசம் டெஸ்ட் தொடர் வரும் 21 ஆம் திகதி கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் வங்கதேசத்தில் கொரோனா பரவல் அதிகமானதால் நாளை முதல் ஒரு வார காலம் நாடு தழுவிய லாக்டவுன் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதன் காரணமாக வங்கதேச அணி இலங்கை சுற்றுபயணத்தை ரத்து செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் தலைமை நிர்வாகி நிஜாமுதின் சவுத்ரி கூறுகையில், நாட்டின் நிலைமைகள் காரணமாக இலங்கைக்கான தமது சுற்றுப் பயணத்தை இரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த இன்னும் தீர்மானிக்கவில்லை.
ஒரு சில நாட்களின் பின்னர் நிலைமைகளை அவதானித்து, இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, சுற்றுப் பயணம் குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.