ரஷ்யா மீது பிரித்தானியா போர் பிரகடனம் செய்யுமா?: பிரித்தானிய அமைச்சரின் தெள்ளத் தெளிவான பதில்
ரஷ்யா மீது பிரித்தானியா போர் பிரகடனம் செய்யுமா என்ற கேள்வி, ஊடகவியலாளர்களால் பிரித்தானிய இராணுவ அமைச்சர் முன் வைக்கப்பட்டது.
பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர், பிரித்தானிய இராணுவ அமைச்சரான James Heappey முன் இந்த கேள்வியை மீண்டும் மீண்டும் வைத்தார்.
அதற்கு பதிலளித்த James, நாம் ரஷ்யா மீது போர் பிரகடனம் செய்வோமா என்று நீங்கள் கேட்டால், எனது பதில் ’இல்லை’ என்பதாகும் என்றார்.
அதாவது, நேட்டோ படைகளுக்கு, உக்ரைன் போர் நடக்கும் இடத்தில் கால்வைக்கும் திட்டம் இல்லை. பிரித்தானியாவைப் பொருத்தவரை, ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிப்பதும், SWIFT சர்வதேச நிதி வழங்கல் அமைப்பிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றுவதும் மட்டுமே பிரித்தானியாவின் திட்டம் ஆகும்.
The Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) என்பது, பெல்ஜியத்தை மையமாகக் கொண்ட கூட்டுறவு சங்கமாகும். உலகம்முழுவதிலுமுள்ள வங்கிகளுக்கிடையிலான பணப்பரிவர்த்தனைக்கு மத்தியஸ்தராகவும், பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் அமைப்பாகவும் அது செயல்படுகிறது.