Indian Overseas Bank 1 வருட FD -ல் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 1 வருட FD -ல் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
Indian Overseas Bank
FD நிலையான வைப்புத்தொகை (FD) உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதால் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், FD-களுக்கான வட்டி விகிதங்கள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் வகை மற்றும் கால அளவைப் பொறுத்தது.
உங்கள் அசல் நிதியைக் குறைக்காமல் நிலையான மாதாந்திர வருமானத்திற்கு இது ஒரு நல்ல நிதி முதலீடாகும்.
நீண்ட காலத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க தொகையை டெபாசிட் செய்து, உங்கள் கணக்கில் மாதாந்திர வட்டியை பெறலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1 வருட FDக்கு பொது குடிமக்களுக்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
முதலீடு
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 1 வருட FD-ல் பொது குடிமக்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.36,456 கிடைக்கும். அதன்படி, முதிர்வுத்தொகையாக ரூ.5,36,456 கிடைக்கும்.
*இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 1 வருட FD-ல் பொது குடிமக்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.72,913 கிடைக்கும். அதன்படி, முதிர்வுத்தொகையாக ரூ.10,72,913 கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |