பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் மீது பெண்கள் வைத்துள்ள சரமாரி புகார்: ஒரு பெண் தற்கொலை முயற்சி
பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளரான ஒருவர் மீது எட்டு பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளரான Eric Zemmour (63) மீது தொடர்ச்சியாக புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், Ericஉடைய பிரச்சார மேலாளரான Sarah Knafo (35) என்னும் இளம்பெண், Ericஉடைய குழந்தையை வயிற்றில் சுமப்பதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. Ericக்கு ஏற்கனவே திருமணமாகி வயது வந்த மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம், இந்த Sarah, பிரான்சுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை எப்படி நாடு கடத்துவது என்பது குறித்து நடைமுறை கையேடு ஒன்றை எழுதியவர் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் Eric போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் அவர் மீது பாலியல் புகாரளித்துள்ளார்கள்.
எழுத்தாளரான Aurore Van Opstal (31) என்ற பெண், Eric தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து, மேலும் ஏழு பெண்கள் தங்களை Eric பாலியல் ரீதியாக தாக்கியதாக அல்லது முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்கள்.
Aurore, தான் தன் தந்தையுடன் இருக்கும்போதே, அவருக்குத் தெரியாமல் தன்னை Eric தவறாகத் தொட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், Ericடைய நண்பர் ஒருவர் இந்த சம்பவத்தை புத்தகமாக்க, அதில் Auroreவைக் குறித்து அவர் தவறாக விமர்சிக்க, மன அழுத்தத்திற்குள்ளான Aurore, 60 அடி உயர பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார். உள்ளூர் ஊடகங்கள், அவர் இறந்துவிட்டதாகவே செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆனால், ஐந்து மாதங்களுக்குப் பிறகு மெதுவாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், Eric இளம் ஊடகவியலாளர் ஒருவரிடம் தவறாக பழக முயல, அவர் விலகிச்சென்றிருக்கிறார். ஆகவே, கோபமடைந்த Eric, அந்த இளம்பெண்ணுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றில், என்னை உன் வீட்டுக்கு வரவழைத்து உன்னை வன்புணர அனுமதிக்கும் வரை காத்திருப்பேன் என்ற அர்த்தத்தில் ஒரு வாக்கியம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த புகார்கள் குறித்து Ericஇடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில், அவர் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை!