திமுகவில் இன்பநிதிக்கும் வேலை செய்யனும்.., பேரனுக்கு போஸ்டர் ஒட்ட முடியாது என நிர்வாகி விலகல்
திமுகவில் இன்பநிதிக்காவும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதால் கட்சியிலிருந்து விலகினேன் என்று திமுக நிர்வாகி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நிர்வாகி விலகல்
தமிழக மாவட்டமான சேலம், ஓமலூரை அடுத்த பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் எழில்அரசன் (35). திமுக நிர்வாகியான இவர், கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இவர் வெளியிட்ட அறிக்கையில், "சேலம் மத்திய மாவட்ட திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஒன்றியப் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்த நான், கீழ்காணும் காரணங்களால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
சத்துணவு உப்புமாவுக்கு பதில் பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேணும்.., சிறுவனின் பேச்சுக்கு அமைச்சரின் ரியாக்சன்
*திமுக ஆட்சியில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை.
* பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "நான் 2015-ம் ஆண்டு முதல் கட்சியில் இருக்கிறேன். அடிப்படை உறுப்பினர் முதல் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த உதயநிதியை குறுகிய காலத்திற்குள் இளைஞரணிச் செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என உயர்ந்த பொறுப்பு கொடுத்தனர்.
பல ஆண்டுகளாக கட்சியில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் இல்லை. வரும் காலத்தில் இன்பநிதிக்காகவும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று தான் வேதனையாக உள்ளது. இதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |