பெட்டை கோழி கூவி பொழுது விடியுமா? பெண் விடியலை போற்றும் குறும்படம்! Exclusive video
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக பல அநியாயங்கள் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கியது. குறிப்பாக சமூக ஊடகத்தில் பெண் என்பவள் ஒரு வியாபார பொருளாகவே பார்க்கப்படுகிறாள்.
பெண்கள் ஒரு வீடியோவை பதிவிட்டால் உடனே அவர்களை தரக்குறைவாக பேசுவதற்கு ஒரு கூட்டமே சூழ்ந்துவிடும். இது போன்ற பல கொடுமைகளில் பெண்கள் சிக்கி கொண்டு மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
யாரிடம் சொல்வது, எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சிலர் தங்கள் உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கொடுமைகளை சந்திக்கும் பெண்களுக்கு ஒரு மனவலிமை ஊட்டும் விதமாக இந்த ஆவணப்படத்தின் கரு அமைந்துள்ளது. ஒரு ஆணாக நீங்கள் நினைப்பது குறித்து உங்கள் கருத்துகளை தவறாமல் கமெண்ட் செக்சனில் பதிவிடுங்கள்..