மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவுக்கு மேகன் வருவாரா?: அரண்மனை வட்டாரம் கருத்து
மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி கலந்துகொள்ளக்கூடும், ஆனால், மேகன் கலந்துகொள்ள மாட்டார் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
மன்னர் சார்லசுடைய பெருந்தன்மை
இளவரசர் ஹரியும் மேகனும் தொடர்ந்து அவமதித்தும்கூட, மன்னர் சார்லஸ் அவர்களை தனது முடிசூட்டு விழாவுக்கு அழைத்துள்ளார்.
அது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.
ஆனால், அவரது அழைப்பை ஏற்று ஹரியும் மேகனும் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார்களா?
Image: Getty Images
மேகனுக்கு தைரியம் கிடையாது
அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த Paul Burrell இது குறித்துக் கருத்து தெரிவிக்கும்போது, மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி கலந்துகொள்ளக்கூடும், ஆனால், மேகன் கலந்துகொள்ள மாட்டார். காரணம் அவருக்கு அந்த அளவுக்கு தைரியமோ, மன உறுதியோ கிடையாது என்கிறார்.
மேலும், மன்னருடைய முடிசூட்டு விழாவின்போது அவரருகே தன் தாய் நிற்கவேண்டிய இடத்தில் ராணி கமீலா நிற்பதைப் பார்க்க ஹரிக்கு கடினமாகத்தான் இருக்கும் என்கிறார் அவர்.
Image: Getty Images
ஏற்கனவே தனது புத்தகத்தில் கமீலாவை, வேறு பெண், மோசமான சித்தி என்றெல்லாம் விமர்சித்துள்ள நிலையில், அவரை எதிர்கொள்வது ஹரிக்கு கடினமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் அவர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.