சென்னையில் முஸ்லிம்க்கு வீடு தர மாட்டேனு சொன்னாங்க.., சொந்தவீடு வாங்கிய அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சி
சென்னையில் சொந்த வீடு வாங்கிய அறந்தாங்கி நிஷா கிரஹப்பிரவேசம் நடத்தி பால் காய்ச்சியுள்ளார்.
புதுவீடு வாங்கிய அறந்தாங்கி நிஷா
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா, தனது பேச்சால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். பின்னர் மாரி 2 திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார்.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பங்கேற்றார். தற்போது, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் இவர், சென்னையில் சொந்த வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ளார்.
மேலும் அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, "உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தோட சென்னை வீடு பால் காய்ச்சியாச்சு .வீட்டுக்கு அப்பாவோட பெயர் தான் வச்சிருக்கேன், நான் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு சென்னையில் சொந்தக்காரங்கன்னு யாரு கிடையாது.
சின்ன வயசுல ஒரு தடவை தான் அப்பா என்ன சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க, அதுக்கப்புறம் நான் எப்ப சென்னைனு சொன்னாலும் இந்த கூட்டிட்டு போறேன் மா கூட்டிட்டு போறேன்னு என்னை எப்பவும் ஏமாத்திட்டே இருப்பாங்க. திரும்ப நான் சென்னையில பயணிக்கிறதுக்கு காரணம் என்னுடைய அப்பா,அதுக்கு அப்புறம் என்னுடைய தமிழ்.
ஆறு மாசமா சென்னையில வீடு தேடுன போ ஆர்டிஸ்ட் வீடு தர மாட்டேன், முஸ்லிம்க்கு வீடு தர மாட்டேன் இப்படி எத்தனையோ விமர்சனங்களை சந்தித்ததுக்கு அப்புறம் குடும்பமா சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்கிறலாம்னு முடிவு எடுத்து இப்போ வீடு வாங்கியாச்சு.
எப்பவுமே எல்லாரும் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட நம்ம எங்க தோக்குறமோ அங்கதாங்க ஜெயிக்கணும், என்னோட வெற்றிக்கு எப்பவுமே என்னுடைய குடும்பமும் என்னுடைய நண்பர்களும் என்னுடைய ரசிகர்களும் என்னுடைய தமிழும் தான் காரணம்.
எல்லாருக்குமே ரொம்ப நன்றி என்னுடைய வளர்ச்சியை உங்களுடைய வளர்ச்சியா பாக்குறதுக்கும்,என்னை எப்பவுமே உங்களில் ஒருத்தியா பார்க்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |