2026ஆம் ஆண்டிலாவது விலைவாசி குறையுமா?
எங்கோ ஓரிடத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டை ஊடுருவியது. ஆனால், அதை வெறும் ஒரு செய்தியாக உலகத்தால் பார்க்கமுடியவில்லை.
காரணம், இரண்டு நாடுகளுக்கு இடையிலான அந்தப் போர், எல்லா நாடுகள் மீதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆம், பல நாடுகளில் நிலவும் விலைவாசிப் பிரச்சினைகளைக் குறித்து பேசும்போது, ரஷ்யா உக்ரைன் போருடன் இணைத்துத்தான் அதை பேசமுடிகிறது.
ஏனென்றால், ரஷ்யா உக்ரைன் போர், மொத்த உலகின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.
2026ஆம் ஆண்டில் ஜேர்மனியில் விலைவாசி குறையுமா?
வலிமையான பொருளாதார நாடுகள் என கருதப்படும் நாடுகளில் ஒன்றான ஜேர்மனியும் இந்த விடயத்தில் தப்பவில்லை.
ஆக, 2026இலாவது விலைவாசி குறையுமா என்னும் கேள்வி சாதாரண மக்கள் மனதில் ஒலிப்பதை மறுப்பதற்கில்லை.

Credit: www.wise.com
உண்மை என்னவென்றால், 2026ஆம் ஆண்டிலும் ஜேர்மனியில் விலைவாசி அதிகமாகத்தான் இருக்கப்போகிறது.
உணவகங்களில் சாப்பிடுவது, கார் காப்பீடு, விடுமுறைக்கு வெளிநாடு செல்லுதல் போன்ற விடயங்கள் அதிகம் செலவு பிடிக்கும் விடயங்களாக இருக்கப்போகின்றன.
அதைவிட முக்கியம், அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களின் விலை அதிகமாக இருக்கப்போவதால், சாதாரண மக்கள் இன்னமும் அதனால் பாதிக்கப்படப்போகிறார்கள்.
என்ன காரணம்?
இப்படி விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரிப்பதற்கு இரண்டு விடயங்கள் காரணம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
ஒன்று வலுவான ஊதிய வளர்ச்சி, மற்றொன்று, சர்வதேச எரிசக்தி விலைகள் வீழ்ச்சியடைவதிலிருந்து விடுபடுவதில் தாமதம் ஆகியவையே பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம்.
ஆக, 2026இலும் கூட, குடும்பங்களால் கொரோனாவுக்கு முந்தைய விலைவாசி குறைவான காலகட்டத்தை எட்டுவது கடினமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவுப்பொருட்களைப் பொருத்தவரை, உணவுப் பணவீக்கம் குறைந்திருந்தாலும், சில பொருட்கள் விலை மிக அதிகமாக காணப்படுகிறது.

Credit: cherrytimes.it
குறிப்பாக, குறைவான விளைச்சல் காரணமாக செர்ரிப் பழங்கள் விலை முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 2025 நவம்பரில் 50 சதவிகிதம் வரை அதிகரித்தது.
அதேபோல, சொக்லேட் விலை 25 சதவிகிதமும், அரைத்த மாட்டிறைச்சி மற்றும் காபிக்கொட்டைகள் விலை அதே காலகட்டத்தில் 22 சதவிகிதமும் அதிகரித்தன.
கடைசியாக, சில நல்ல விடயங்கள் நடந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை. ஆம், வெண்ணெய் விலை 22 சதவிகிதமும், திராட்சை, ஆலிவ் எண்ணெய், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளன.
அத்துடன், தொலைக்காட்சிப்பெட்டி, மொபைல் போன்ற மின்னணுப்பொருட்களும் கடந்த இலையுதிர்காலத்தில் குறைந்துள்ளது, குடும்பங்களுக்கு சிறிது ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது எனலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |